செய்திகள்
மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போகிறது: பி.ஆர்.பாண்டியன் பேட்டி
மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
காஞ்சீபுரம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள், வேதாரண்யத்தில் இருந்து திருவாரூர் வரை தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த விவசாயிகள் குழுவினர் நேற்று காஞ்சீபுரத்துக்கு வந்தனர். காஞ்சீபுரம் சங்கரமடம் முன்பு காஞ்சீபுரம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றுபட்டு போராட களமிறங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு, போலீசாரை தன்வசப்படுத்தி சென்னைக்குள் எங்களை நுழைய விடாமல் தடை விதித்து உள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசு போலீசாரை வைத்து அச்சுறுத்தலாம் என்று நினைத்தால் மண்ணைத்தான் கவ்வவேண்டும். விவசாயிகளின் மோட்டார் சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசு இவ்வாறு தடை விதிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு மாநில அரசு துணைபோகிறது. விவசாயிகள் மோடி அரசுக்கு புத்தி கொடுப்பதற்கு, மோடி அரசை வேறெடுப்பதற்கு, தமிழக வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க முன்வந்து ஒன்றுபட்டு உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ஏ.சி.வெங்கடேசன், மாநில பொருளாளர் நாகை எஸ்.ஸ்ரீதர் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த மோட்டார் சைக்கிள் பேரணி காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரத்தில் இருந்து காஞ்சீபுரம், வாலாஜாபாத், திருமுக்கூடல் வழியாக செங்கல்பட்டுக்கு சென்றது.