செய்திகள்

காசிமேட்டில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் 500 போலீசார்

Published On 2018-04-28 16:01 IST   |   Update On 2018-04-28 16:01:00 IST
சென்னை காசிமேட்டில் உள்ள கடற்கரையில் 500 போலீசார் பொதுமக்களுடன் இணைந்து அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள்.
ராயபுரம்:

காவல் பணியோடு விழிப்புணர்வு பணிகளையும் சென்னை போலீசார் இணைத்து கொண்டுள்ளனர்.

காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் புகார்கள் தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதனை சந்தித்தனர். அப்போது மீன்பிடி துறைமுக பகுதி குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்று கிடக்கும் தகவலை அளித்துள்ளனர்.

தற்போது மீன்பிடி தடை காலம். எனவே துறைமுக பகுதி வெறிச்சோடி கிடக்கும். இந்த நேரத்தை பயன்படுத்தி மீனவர் அமைப்புகளுடன் இணைந்து போலீசார் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

500 போலீசார் பொதுமக்களுடன் இணைந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள். கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் கூடுதல் கமி‌ஷனர் ஜெயராமன், உதவி கமி‌ஷனர்கள் ஷியாமளா தேவி, கலைச்செல்வன், செசான்சாய் ஆகியோர் மேற்பார்வையிட்டு பாராட்டினார்கள். #Tamilnews

Similar News