செய்திகள்

பிரேசிலில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.9 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Published On 2018-04-27 14:46 IST   |   Update On 2018-04-27 14:46:00 IST
பிரேசிலில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.9 கோடி போதைப்பொருளை கடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Drugs

ஆலந்தூர்:

பிரேசிலில் இருந்து துபாய் வழியாக சென்னை வரும் விமானத்தில் பெரிய அளவில் கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பிரேசிலில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது போர்ச்சுக் கல்லை சேர்ந்த ஒருவர் கொண்டு வந்த கம்ப்யூட்டர் யூ.பி.எஸ். அதிக எடை இருந்தது. அதனை பிரித்து பார்த்த போது 6 பண்டல்களில் போதைப் பொருளான கோஹைன் இருந்தது.

வெளியில் தெரியாமல் இருக்க பண்டல்களை கம்பியால் சுற்றி யூ.பி.எஸ்.சில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

மொத்தம் 3 கிலோ கோஹைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 கோடி ஆகும். அதனை போதைப் பொருள் தடுப்பு பிரிவில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போர்ச்சுக்கல் நாட்டுக்காரரை அதிகாரிகள் கைது செய்தனர். பிரேசிலில் இருந்து போதைப் பொருளை வாங்கி சென்னை கடத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் யார்? யாருக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்பட இருந்தது என்ற விபரத்தையும் அவரிடம் சேகரித்து வருகிறார்கள். #Drugs

Similar News