செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காஞ்சீபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-04-12 15:04 IST   |   Update On 2018-04-12 15:04:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் தியாக ராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர்கள் ராகவன், குமரவேல், தியாகு, வெங்கடபதி, செல்வக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் சேவியர், மாநில அமைப்பு செயலாளர் தாமோதரன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News