செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்தியவர் சிக்கினார்
சென்னை விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கைக்கு செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்தியது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும்.
விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சாகுல் அமீது என்பது தெரிந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.