செய்திகள்
தேவகோட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 2 பேர் கைது
தேவகோட்டை அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை:
தேவகோட்டையை அடுத்த எழுவங்கோட்டை மற்றும் ஈகரை கிராமங்களில் விருசுழி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்துக்கு தகவல் கிடைத்தது.
அவரது புகாரின்பேரில் தாலுகா போலீசார் எழுவங்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியில் வந்த சிந்தாமணி செல்வகுமார், வேப்பங்குளம் இளையராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews