செய்திகள்

மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி- பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Published On 2018-03-12 18:24 IST   |   Update On 2018-03-12 18:24:00 IST
மயான கொட்டகையில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலியானர். சம்பவம் அறிந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே காலனி நகரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55), கொத்தனார். இவர் இன்று காலை தா.பழூர் அருகே சிந்தாமணியில் உள்ள மயான கொட்டகையில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மேற்கூரையில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது மயான கொட்டகைக்கு மேலே சென்ற மின்சார வயர் தங்கராசு கையில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து சேகர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்தும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா. பழூர் அருகே உள்ள சிந்தாமணியில் திடீர் சாலை மறியல் செய்தனர்.

மாயன கொட்டகையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்தும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இறந்துபோன கொத்தனார் சேகருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். #tamilnews

Similar News