செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் 147 மையங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கபட்டு 11 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகராட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கடை வீதி, பேருந்து நிலையம், நகர்புற சுகாதார மையம் உள்ளிட்ட 24 மையங்ளும், மீன் சுருட்டி வட்டாரத்தில் 123 மையங்களில் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்பட்டது.
மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்ள், ஊட்டசத்து பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற் பார்வையாளர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் என 650 பேர் பணியாற்றினார். மேலும் இந்த முகாம் இன்று விடுபட்டவர்களுக்காக மீண்டும் 13-ம் தேதி வரை ஒவ்வொரு வீடாக சென்று கிராம சுகாதார செவிலியர்கள் மருந்து கொடுக்கவும் உள்ளனர்.
மீன்சுருட்டி வட்டாரத்தில் உள்ள 12 ஆயிரத்து 50 குழந்தைகளில் 11 ஆயிரத்து 752 பேருக்கு கொடுக்கபட்டுள்ளது. மேலும் இரண்டு தினங்களில் 100 சதத்தை முடிக்க உள்ளனர்.
போலியோ சொட்டு மருந்து முகாம் தினத்தை முன்னிட்டு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லஷ்மிதரன் தலைமையில் முகாம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெற்றோர்கள் 5 வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து கொடுத்து அழைத்து சென்றனர்.