செய்திகள்

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்

Published On 2018-03-05 17:18 IST   |   Update On 2018-03-05 17:18:00 IST
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீடு புகுந்து இளம்பெண் கடத்தப்பட்டார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள ரணசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மருது. இவரது மகள் கல்பனா (வயது 18). ஒட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி என்ற அருண்குமார் (23). கல்பனாவும், அருண்குமாரும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கல்பனாவை திருமணம் செய்வது என்ற முடிவில் அருண்குமார் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் அருண்குமார் தனது நண்பர்கள் 8 பேருடன் கல்பனா வீட்டுக்குள் புகுந்தார். அங்கிருந்த கல்பனாவை கடத்த முயன்றனர். அவர்களை கல்பனாவின் தம்பி கண்ணப்பன் (16) தடுக்க முயன்றான். அவனை தாக்கிய அந்த கும்பல் செல்போனை பறித்தது. பின்னர் கல்பனாவை கடத்திச் சென்று விட்டது.

கும்பல் தாக்கியதில் காயமடைந்த கண்ணப்பன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனது மகள் கடத்தப்பட்டது குறித்து கல்பனாவின் தாயார் செல்வி திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார். #tamilnews

Similar News