செய்திகள்
திருப்பத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை- கணவர் மீது போலீசில் புகார்
திருப்பத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள கீரணிப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திபிரியா (வயது 23). இவருக்கும், தேவகோட்டை தாலுகா சிறுவாச்சியைச் சேர்ந்த நாகராஜனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எம்.காம் படித்துள்ள நாகராஜன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நாகராஜன் கூடுதல் நகை-பணம் வாங்கி வருமாறு சக்தி பிரியாவிடம் நச்சரிக்கத் தொடங்கினார்.
நீங்கள் கேட்கும் நகை-பணத்தை எனது பெற்றோர் தரும் நிலையில் இல்லை. அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று சக்தி பிரியா கூறினார். அதையெல்லாம் நாகராஜன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சக்தி பிரியா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சக்தி பிரியா திருப்பத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கணவர் நாகராஜனை தன்னுடன் சேர்த்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு பிரச்சனை தொடர்பாக நாகராஜன், அவரது தாயார் முத்து மீனாள், உறவினர் விக்னேஷ், மற்றொரு நாகராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #Tamilnews