செய்திகள்

கோயம்பேட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஓட்டல் கட்டிடம் இடிப்பு

Published On 2018-02-26 10:43 GMT   |   Update On 2018-02-26 10:43 GMT
கோயம்பேடு அரும்பாக்கம் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஓட்டல் கட்டிடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று அகற்றினர்.
போரூர்:

கோயம்பேடு அரும்பாக்கம் சாலையில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. ஓட்டல் பின்புறம் கூவம் ஆறு செல்கிறது. ஓட்டல் கட்டிடம் பாதி கட்டிடத்திற்கு மேல் கூவம் ஆற்று படுகையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற கடந்த 2010ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் பலமுறை நோட்டீஸ் அளித்தும் ஓட்டல் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புக்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை அனுமதிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோவன் தலைமையில் சென்னை பெருநகர மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் வருவாய்த் துறை வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர் மற்றும் கோயம்பேடு பஸ்நிலைய இன்ஸ்பெக்டர் ரூபன் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டலின் பின்பகுதி முற்றிலும் அகற்றப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க பொதுப்பணித்துறை சார்பில் ஓட்டல் நிர்வாகத்திற்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News