செய்திகள்

கோபி அருகே மாமியாருடன் தகராறு: மருமகள் தற்கொலை

Published On 2018-01-24 15:45 IST   |   Update On 2018-01-24 15:45:00 IST
கோபி அருகே மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோபி:

கோபி அடுத்த சந்திரா புரத்தை சேர்ந்தவர் மும்மூர்த்தி மில் தொழிலாளி இவரது மனைவி பெயர் பிரபா (வயது 22).

பிரபாவுக்கும் கணவரின் தாயார் (மாமியார்) சரசம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பிரபா வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரபா தனது துப்பட்டாவால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால கோபி ஆர்.டி.ஓ கோவிந்தராஜனும், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Similar News