செய்திகள்

சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி 2020-ல் செயற்கை கோள் அனுப்பப்படும்: இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி

Published On 2018-01-21 23:15 GMT   |   Update On 2018-01-21 23:15 GMT
வருகிற 2020-ம் ஆண்டில் திட்டமிட்டபடி சூரியனை ஆய்வு செய்வதற்கான செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். #MayilsamyAnnadurai #AdithyaL1
ஈரோடு:

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டு வருகிறார்.  

இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் நடந்த பள்ளி பவள விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும். இளம் விஞ்ஞானிகள் புதிய உத்திகளை கண்டறிவதுடன் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 முதல் 18 செயற்கை கோல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார்.

இந்த ஆய்வு பணிகளுக்காக செயற்கைக்கோள் திட்டம், ஆதித்யா எல் 1 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளானது பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். ராக்கெட்டின் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. #MayilsamyAnnadurai #AdithyaL1 #Sunresearchsatellite #tamilnews
Tags:    

Similar News