செய்திகள்

பண்ருட்டி அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-01-19 19:11 IST   |   Update On 2018-01-19 19:11:00 IST
பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பாரதிராஜா(வயது 27). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் சாலையோரம் உள்ள முந்திரிதோப்பில் ஒரு மரத்தில் பாரதிராஜா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News