செய்திகள்

அம்மாபேட்டை அருகே பியூட்டி பார்லரில் கொள்ளை

Published On 2018-01-16 16:23 IST   |   Update On 2018-01-16 16:23:00 IST
அம்மாபேட்டை அருகே பியூட்டி பார்லரில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணை புதூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி. இவர் பூனாச்சி பகுதியில் பெண்கள் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

இங்கு கவரிங் நகைகள் மற்றும் அலங்கார பொருட் களை வாடகைக்கு கொடுத்து வருகிறார். தினமும் பியூட்டி பார்லரை திறந்து மீண்டும் இரவில் பூட்டி விட்டு செல்வார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமதி வழக்கம் போல் பியூட்டி பார்லரை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை பியூட்டி பார்லர் வெளி கதவு உள் கதவு என அனைத்து திறந்து கிடந்தது.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து கடை வழக்கமாக 9 மணிக்கு தான் திறக்கப்படும். ஆனால் அதற்கு முன்னதாக திறந்து இருக்கிறதே என சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்து சுமதியிடம் தெரிவித்தனர். சுமதி பியூட்டி பார்லருக்கு விரைந்து வந்து கடைக்கு சென்று பார்த்தார். அப்போது பொருட்கள் சிதறி கிடந்தது.

மேலும் கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் கொள்ளை போய் இருந்தது தெரிந்தது. அங்கு இருந்த உண்டியல் பணமும் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது. மர்ம ஆசாமிகள் இதை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News