செய்திகள்

பண்ருட்டியில் தீ விபத்து: 2 வீடுகள் எரிந்து சாம்பல்

Published On 2018-01-15 15:12 IST   |   Update On 2018-01-15 15:12:00 IST
பண்ருட்டியில் நள்ளிரவு 1 மணி அளவில் 2 வீடுகள் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (50) கூலி தொழிலாளி. இவர் இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டு இருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை தொடர்ந்து ஏழுமலை குடும்பத்தினர் அலறி அடித்துக கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்த குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பலானது.

பின்னர் அந்த தீ அருகில் இருந்த இளையபெருமாள் என்பவரது வீட்டுக்கும் பரவியது. இதில் அந்த வீடும் எரிந்து சேதம் அடைந்தது. அதிஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பண்ருட்டி தாசில்தார் விஜய் ஆனந்து தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும் பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். #tamilnews

Similar News