செய்திகள்
பொன்னமாரவதி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மேலக் களத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற ராசமாணிக்கம் (33). விவசாயி. இவரது மனைவி ஜானகி (23). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடை பெற்றது. இந் நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடை குடும்ப தகராறு நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 8-ம்தேதி ஜானகி வீட்டில் யாரும் இல்லாத போது கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜானகியின் தந்தை ராசு தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பொன்னம ராவதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் பொன்ன மராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகியின் உடலைக் கைப்பற்றி வலைய பட்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் நடைபெற்று 6 மாதமே ஆனதால் கோட்டாச்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இதனையடுத்து இலுப்பூர் கோட்ச்சியர் சேக் மைதீன் சம்பவ இடத்திற்கு சென்று விசாணை நடத்தினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews