செய்திகள்

நீலாங்கரை, மெரீனாவில் கடலில் குளித்த 3 பேர் பலி

Published On 2018-01-08 13:48 IST   |   Update On 2018-01-08 13:48:00 IST
நீலாங்கரை, மெரீனாவில் கடலில் குளித்த 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்தவர் சர்வேஸ்வரன் (வயது 19). தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இவரது நண்பர் சுபாஷ். விழுப்புரத்தை சேர்ந்த அவர் ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இருவரும் நேற்று மாலை நீலாங்கரையில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றனர். ராட்சத அலையால் இருவரும் இழுத்து செல்லப்பட்டு மூழ்கி இறந்தனர்.

இருவரது உடல்களும் இன்று காலை கரை ஒதுங்கியது. நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மெரீனாவில் கண்ணகி சிலை பின்புறம் மணிப்பூரை சேர்ந்த லால்ராம் என்ற வாலிபர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடலில் இறங்கி குளித்தார்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் தத்தளித்தனர். இதனைப் பார்த்த மீனவர்கள் கடலில் குதித்து அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் லால்ராம் உயிரிழந்தார். மீட்கப்பட்ட நண்பர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Similar News