செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பா.ஜனதா பிரமுகர் விபத்தில் பலி

Published On 2018-01-08 13:35 IST   |   Update On 2018-01-08 13:35:00 IST
காஞ்சீபுரம் அருகே பா.ஜனதா பிரமுகர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் அவர் பலியானார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). பாரதிய ஜனதா கட்சியில் காஞ்சீபுரம் ஒன்றிய செயலாளராக இருந்தார்.

இவர் வேடல் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். தினமும் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஸ்ரீதர் தனது மோட்டார் சைக்கிளில் வேடல் நோக்கி சென்றார். கீழம்பி கூட்டு சாலையில் வந்தபோது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து பாலு செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் டிரைவரை தேடி வருகிறார்.#tamilnews

Similar News