செய்திகள்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் பாண்டியன் (27). வியாபாரி. இவர் காஞ்சீபுரத்தில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
வேளியூர் அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அருள்பாண்டியனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். #tamilnews