செய்திகள்

மாமல்லபுரம் அருகே 7-ந் தேதி ஜல்லிக்கட்டு: 400 காளைகள் பங்கேற்கிறது

Published On 2018-01-04 14:57 IST   |   Update On 2018-01-04 14:57:00 IST
மாமல்லபுரத்தில் 7-ந்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 400-க்கு மேற்பட்ட காளைகள் 1000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர் பங்கேற்கின்றனர்.
மாமல்லபுரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் குழந்தைகள், இளைஞர்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நேரில் கண்டுகளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை முடிவு செய்தது.

மாமல்லபுரம் அடுத்த கிருஷ்னன்காரனை கிழக்கு கடற்கரை சாலையோரம் நடத்த திட்டமிட்டு அதற்காக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூருராகும் என்பதால் கல்பாக்கத்தில் இருந்து 15கி.மீ தூரத்தில் உள்ள சீக்கினாங்குப்பம் மார்க் சுவர்ணபூமி அருகே நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் இருந்து 400-க்கு மேற்பட்ட காளைகள் 1000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களை வர வைத்து வரும் ஜன 7-ம்தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக வாடிவாசல் அமைக்கும்பணி நடந்து வருகிறது. #tamilnews

Similar News