செய்திகள்

தேர்தல் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை: தி.மு.க உயர்நிலைக்குழு தீர்மானம்

Published On 2017-12-29 13:39 GMT   |   Update On 2017-12-29 13:39 GMT
ஆர்.கே நகரில் ஏற்பட்ட தோல்வியால் தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #DMK #MKStalin #RKNagar
சென்னை:

ஆர்.கே நகர் தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக தி.மு.க.வின் உயர்நிலைக்குழு இன்று மாலை கூடியது. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் அன்பழகன், துரை முருகன், கனிமொழி, ராசா உள்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து தீர விவாதிக்கப்பட்டது. அதேபோல, தேர்தல் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபார் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பான்மையை இழந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அ.தி.மு.க அரசு ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், அதை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.#DMK #MKStalin #RKNagar
Tags:    

Similar News