செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் 3 கி.மீட்டர் நீந்தி கரை சேர்ந்த இலங்கை மீனவர்கள்

Published On 2017-12-09 13:21 IST   |   Update On 2017-12-09 13:21:00 IST
இலங்கை யாழ்பாணம் சாப்னா பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. அவர்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நீந்தி இன்று காலை கரையேறினர்.
வேதாரண்யம்:

இலங்கை யாழ்பாணம் சாப்னா பகுதியை சேர்ந்த கடாத்கஜன் (வயது 27). முருகன் (32), விஜேந்திரன் (40). ஆகிய 3 மீனவர்களும் பருத்திதுறை பகுதியில் நேற்று மதியம் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த 3 மீனவர்களும் கரையை நோக்கி நீந்தி வந்தனர். அவர்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நீந்தி இன்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் என்ற இடத்தில் கரையேறினர்.

மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர்களை அப்பகுதி மீனவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். உயிர் தப்பிய இந்த 3 மீனவர்களும் இலங்கையில் வசிக்கும் தமிழ் மீனவர்கள் ஆவார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News