செய்திகள்
போரூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
போரூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
போரூர் அருகே இன்று காலை இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களது மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா கடந்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் மதுரவாயலை சேர்ந்த பிரதீப், சதன், ராஜேஷ், சதீஷ் என்பதும் கோயம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 மோட்டார் சைக்கிள், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.