செய்திகள்

ஜெயலலிதா நினைவுநாள் பேனர் வைத்த தினகரன் ஆதரவாளர்கள் 7 பேர் கைது

Published On 2017-11-29 15:09 IST   |   Update On 2017-11-29 15:09:00 IST
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி பேனர் வைக்க முயன்ற தினகரன் ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் புல்லட் பரிமளம், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் பிரமாண்ட பேனர் வைக்க ஏற்பாடு செய்து இருந்தார்.

நேற்று இரவு புல்லட் பரிமளம் மற்றும் ஆதரவாளர்கள் அப்பகுதியில் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து வந்த சின்ன காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், அவர்களிடம் ‘அனுமதி இல்லாமல் பேனர் வைக்கக்கூடாது’ என்று தெரித்தார்.

இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரிடம் புல்லட் பரிமளம் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பேனரை போலீசார் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். மேலும் புல்லட் பரிமளம் மற்றும் ஆதரவாளர்கள் சுரேஷ், செல்வக்குமார், ராஜ்குமார், ஜலந்தர், காஞ்சி ராஜா, சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான 7 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Similar News