செய்திகள்

செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மோதல்

Published On 2017-11-29 07:24 GMT   |   Update On 2017-11-29 07:25 GMT
செங்கல்பட்டில் நடந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டார்.

விழாவையொட்டி பள்ளி முன்பு வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வைத்த பேனரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

மேலும் பேனர் வைப்பதிலும் அவர்களிடையே அதிருப்தி இருந்தது. மேடையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்காததால் விழா நடந்து கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

உடனே அமைச்சர் பெஞ்சமின் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் அமைதி அடைந்தனர்.
Tags:    

Similar News