செய்திகள்

இளையான்குடி அருகே மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகை பறிப்பு

Published On 2017-11-20 16:33 IST   |   Update On 2017-11-20 16:33:00 IST
இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர்கள் மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலைகிராமம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட தெற்கு விசவனூரைச் சேர்ந்தவர் கருப்பாயி (வயது70). இவர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் கருப்பாயியை மறித்து கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் அதனை இறுக்க பிடித்துக்கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கருப்பாயியை சரமாரியாக தாக்கி விட்டு 6½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து சாலை கிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Similar News