செய்திகள்

இளையான்குடி, திருப்புவனத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கோரிக்கை

Published On 2017-11-18 21:56 IST   |   Update On 2017-11-18 21:56:00 IST
இளையான்குடி, திருப்புவனத்தில் பஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான குணசேகரன் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி, திருப்புவனம் பகுதியில் நீண்ட நாட்களாக பஸ் நிலையம் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிக அளவில் கிராமப் பகுதிகள் உள்ளன.

இங்குள்ள சாலை கிராமத்தை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும். திருப்புவனத்தில் நீதிமன்றம், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், கலைக்கல்லூரி அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்த போது இந்தப் பணிகள் முழுவதும் நிறை வேற்றப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்தப்பணிகளை விரைந்து முடிக்க முதல்வர், துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Similar News