தேவகோட்டையில் மாணவன்-இளம்பெண் மாயம்
சிவகங்கை:
தேவகோட்டை தாலுகாவுக்குட்பட்ட முன்னரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவருடைய மகன் மூவேந்தர் செல்வம் (வயது 14).
இவன், தேவகோட்டையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மூவேந்தர் செல்வம், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவனை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் தேவகோட்டை தாலுகா போலீசில் சரவணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் மூவேந்தர் செல்வத்தை தேடி வருகிறார்.
நரியநேந்தலை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகள் கார்த்திகா (19), பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்த இவர், 15-ந் தேதி தேவகோட்டை சென்று வருவதாக கூறிச் சென்றார்.
அதன் பிறகு கார்த்திகா வீடு திரும்பாததால், தேவகோட்டை தாலுகா போலீசில் காளியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரியாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி தாலுகா இடுகபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, விவசாயி. இவருடைய மகன் பாண்டியன் (17). கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாண்டியன், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.