செய்திகள்
திருப்புவனம் அருகே கல்லூரி மாணவர் மாயம்
திருப்புவனம் அருகே கல்லூரி மாணவர் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா பூவந்தியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 21). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
வீட்டில் இருந்து தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வந்தார். 10-ந் தேதி காலை வழக்கம் போல்அய்யப்பன், கல்லூரி செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார்.
அதன் பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகியும் அய்யப்பன் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். ஆனால் அய்யப்பன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பனின் தாயார் பழனியம்மாள், பூவந்தி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் அய்யப்பனை தேடி வருகிறார்.