செய்திகள்

மானாமதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் உள்பட 5 பேர் மீது புகார்

Published On 2017-11-11 17:15 IST   |   Update On 2017-11-11 17:15:00 IST
மானாமதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் உறவினர்கள் மீது பெண் புகார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

மானாமதுரை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 27) இவர், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில், எனக்கும் ஜெயக்குமார் என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அப்போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு எங்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் சித்ரவதை செய்தனர்.

மேலும் என்னை, பெற்றோர் வீட்டிற்கும் அனுப்பி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி ஜெயக்குமார், அவரது தந்தை காசிநாதன், உறவினர்கள் பானுமதி, ராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Similar News