செய்திகள்

சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்: கலெக்டர் லதா

Published On 2017-11-07 16:57 IST   |   Update On 2017-11-07 16:57:00 IST
சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட பொதுமக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம் செல்லும் வகையில் ஒரு முன் முயற்சியாக சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.), முகநூல் (பேஸ்புக்), கட்செவி (வாட்ஸ்-அப்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கீழ்க்கண்ட பொருள்கள் சார்ந்த குறைகளை மேற்கூறிய தள வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். குடிநீர் வசதி, சுகாதாரம், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் வேளாண்மைத் துறை குறித்த தகவல்களைத் தெரிவித்து உடனடி நிவாரணம் பெறலாம். இந்த சேவையை நல்ல முறையில் பொதுமக்கள் பயன்படுத்துமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.), கட்செவி (வாட்ஸ்- அப்) மூலம் குறைகளை தெரிவிக்க வேண்டிய எண்: 89033 31077.

Similar News