செய்திகள்
அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் கிராமம், கொங்காடை, கெட்டிபோடு பகுதியை சேர்ந்தவர் தொட்டமாதி (வயது 55).
சம்பவத்தன்று தொட்டமாதி தனது உறவுக்கார பெண், தனது பேரன் சித்தேசுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வண்டியை சித்தேஸ் ஓட்ட தொட்டமாதி, உறவுக்கார பெண்ணும் பின்னால் உட்கார்ந்து வந்தனர்.
வண்டி எலந்தமர வளைவு பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது அந்த வளைவில் எதிரே திரும்பிய லாரியின் வலது பக்கம் மோட்டார் சைக்கிள் மீது உரசியது.
இதில் தொட்டமாதியும், உறவுக்கார பெண்ணும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் தொட்டமாதி மீது லாரியின் வலதுபுற பின்பக்க சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே தொட்டமாதி இறந்து விட்டார்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.