செய்திகள்
மயிலாடுதுறையில் பெண்ணிடம் நகை பறிப்பு
மயிலாடுதுறையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகையை பறித்து சென்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலெட்சுமி.
இவர் நேற்று இரவு 7 மணியளவில் அங்குள்ள மரப்பட்டறை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.