செய்திகள்

ஈரோடு அருகே ரெயிலில் அடிபட்டு கொத்தனார் பலி

Published On 2017-10-12 16:01 IST   |   Update On 2017-10-12 16:01:00 IST
ஈரோடு அருகே ரெயிலில் அடிபட்டு கொத்தனார் பலியானார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவரின் சட்டை பையில் ஒரு விசிட்டிங் கார்டு இருந்தது.

அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

அப்போது இறந்து கிடந்தவர் ஈரோடு மாணிக்கம் பாளையம் செங்காரம்பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கந்தசாமி (வயது 32) என்பது தெரியவந்தது.

அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை பார்த்து அவர் கந்தசாமிதான் என்பதை உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொத்தனாரான கந்தசாமி அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று தெரியவில்லை.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News