செய்திகள்
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மின்கம்பங்கள் சாய்ந்தன
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. அப்போது சாலையில் மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன.
விழுப்புரம்:
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூரில் நேற்று இரவு 9 மணி முதல் திடீரென்று சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மழையால் நகரின் பிரதான சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் பள்ளமான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.
பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், அண்ணா கிராமம் போன்ற பகுதிகளில் இரவு 11 மணி முதல் மணி பெய்யத் தொடங்கியது.
இந்த மழை விடிய விடிய பெய்தது. பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் இரவில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், மங்களம் பேட்டை, கம்மாபுரம், மந்தாரக்குப்பம், பூ.மங்கலம் போன்ற பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது.
பெண்ணாடம்-திட்டக்குடி சாலையில் சூறாவளி காற்றில் 3 மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இன்று காலை வரை அந்த பகுதியில் மின்விநியோகம் செய்யப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. இரவு 10 மணி முதல் 12 மணி வரை விழுப்புரம், காணை, கோலியனூர், விக்கிரவாண்டி போன்ற பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் தரைப்பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகேயும் மழை நீர் தேங்கியது. உளுந்தூர்பேட்டை, கச்சிராயப்பாளையம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் விடிய விடிய இடியுடன் பலத்த மழை கொட்டியது.
மழையின் போது உளுந்தூர்பேட்டை பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் பகுதியில் 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.