செய்திகள்

கடலூர் அருகே வாகனம் மோதி திருநங்கை பலி

Published On 2017-09-27 17:03 IST   |   Update On 2017-09-27 17:03:00 IST
கடலூர் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருநங்கை ஒருவர் இறந்து கிடந்தார்.

கடலூர்:

கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டிசாவடி பகுதியில் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. இன்று காலை அந்த பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருநங்கை ஒருவர் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News