செய்திகள்

பெண் கடத்தப்பட்டதாக புகார்: விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

Published On 2017-09-11 12:16 GMT   |   Update On 2017-09-11 12:16 GMT
நெய்வேலி அருகே பெண் கடத்தப்பட்டதாக கூறிய புகாரில் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:

நெய்வேலியை அடுத்த தென்குத்து புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கேசவ பெருமாள். விவாயி. இவரது மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார்.

தனது மகளை அதே பகுதியை சேர்ந்த பூவராகவ சாமி என்பவர் கடத்தி சென்று விட்டார் என்று போலீசில் கேசவபெருமாள் புகார் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று கேசவ பெருமாளின் மகள் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

அங்கு போலீசாரிடம், என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. எனது தோழிகளின் வீட்டுக்குதான் சென்று இருந்தேன் என்று கூறினார்.

உடனே அவரது தந்தையான கேசவபெருமாளை போலீசார் அழைத்து அவருடன் மகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையறிந்த பூவராகவசாமி உறவினர்களான ஏழுமலை, கலா, தமிழ்ச் செல்வி, மாலதி, காயத்ரி, பாலாஜி, ராணி ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். உடனே அவர்கள் நேற்று கேசவபெருமாளின் வீட்டுக்கு சென்று, ஏன் எங்களது உறவினர் மீது பொய் புகார் கொடுத்தாய்? என்று கூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து கேசவபெருமாள் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அவர்கள் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, கலா, தமிழ்ச்செல்வன், மாலதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். காயத்ரி, பாலாஜி, ராணி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News