செய்திகள்

ஈரோட்டில் 6 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2017-08-30 16:36 GMT   |   Update On 2017-08-30 16:36 GMT
ஈரோடு மாவட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 6 சாய ஆலைகளின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி, தொழிற்சாலையில் இருந்து சாய கழிவுநீரை சுத்திகரிக்காமல் நீர் நிலைகளில் வெளியேற்றுவதாக புகார் வந்ததை தொடர்ந்து கடந்த 10 நாளில் 6 சாய தோல் ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது.-

ஈரோட்டில் 10 நாட்களில் விதிமுறைகளை மீறி, கழிவுநீரை சுத்திகரிக்காமல் தொழிற்சாலைகளில் இருந்து நீர்நிலைகளில் வெளியேற்றிய 6 சாய மற்றும் தோல் ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆலைகளுக்கு கழிவு நீர் வெளியேற்றுவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கழிவுநீரை வெளியேற்றாமல் இரவில் வெளியேற்றுவதாக நிறைய புகார்கள் வருகின்றன. கழிவுநீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் உள்ள மக்களிடம் கழிவுநீர் திறக்கப்படும் நேரத்தில் தகவல் தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து சாய, தோல் தொழிற்சாலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News