செய்திகள்

முறையான கோரிக்கை வைத்தால் ஸ்டாலினை நிச்சயம் மோடி சந்திப்பார்: இல.கணேசன்

Published On 2017-08-29 16:50 IST   |   Update On 2017-08-29 16:50:00 IST
முறையான கோரிக்கை வைத்தால் நிச்சயம் பிரதமர் மோடி மு.க.ஸ்டாலினை சந்திப்பார் என பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கூறியுள்ளார்.
ஈரோடு:

பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் அணி சார்பில் ஈரோட்டில் இன்று மாலை கூட்டம் நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கலந்து கொள்கிறார்.

இதற்காக ஈரோடு வந்த இல.கணேசன் இன்று சம்பத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிததார்.

நீட் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவை தூய்மையாக வைத்திருந்தது போல பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வரும் மாநிலங்களில் லஞ்ச- லாவண்யமற்ற ஆட்சி நடந்து வருகிறது.

ஒரே கட்சியாக இருந்த அ.தி.மு.க. 2 ஆக பிரிந்தது. அந்த 2 அணியும் இப்போது பா.ஜனதாவால் இணைந்து உள்ளது. விரைவில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் வரும் என எதிர் பார்க்கிறேன். மத்திய மந்திரி சபையில் மாற்றம் வந்த பிறகு தமிழ் நாட்டுக்கு நிரந்தர கவர்னர் நியமிக்கப்படுவார் என எதிர் பார்க்கிறோம்.

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சினனத்தை நிர்ணயிப்பதன் மூலம் நல்ல ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.


பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. வாய்ப்பு தரவில்லை என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். அவர் முறையான கோரிக்கை வைத்தால் நிச்சயம் பிரதமர் மோடி அவரை சந்திப்பார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்துவது மட்டும் விவசாய பிரதிநிதிகள் அல்ல. தமிழகத்தில் விவசாய பிரதிநிதிகள் நிறைய பேர் உள்ளனர்.

இன்று எல்லையில் இந்தியா- சீனா படைகள் குவிக்கப்பட்டு போர் பதட்டம் இருந்து வந்தது. இதில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. சீனா படைகள் வாபஸ் பெற்று விட்டது. இந்திய படைகளும் திரும்ப வந்து விட்டது.

போர் மூலம் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்பது அல்ல. இப்படி சுமூகமான இணக்கமாக செயல்பட்டால் போர் இல்லாமலேயே வெற்றி பெற முடியும் என்பதை பிரதமர் மோடி சாதித்துள்ளார்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

பேட்டியின் போது பா.ஜனதா மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News