செய்திகள்

ஆதம்பாக்கத்தில் குடிநீர் வாரிய ஊழியரிடம் ரூ.3½ லட்சம் கொள்ளை

Published On 2017-08-29 15:24 IST   |   Update On 2017-08-29 15:24:00 IST
ஆதம்பாக்கத்தில் குடிநீர் வாரிய ஊழியரிடம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் ஏ.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் தசரதன். ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்தார்.

பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு மஸ்தான் கோரி தெருவில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்தார்.

திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.3.60லட்சம் கொள்ளை போயிருந்தது.

போலீசார் வாரிய அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 3 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து சென்றது பதிவாகி இருந்தது.

Similar News