செய்திகள்

பெசன்ட்நகரில் கடலில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2017-08-26 15:00 IST   |   Update On 2017-08-26 15:00:00 IST
பெசன்ட்நகரில் கடலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுரவகுமார் சர்மா. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று விடுமுறையையொட்டி தனது நண்பர் சசிராய் உள்பட 15 பேருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றனர். கடலில் இறங்கி குளித்தபோது கவுரவகுமார் சர்மா, சசிராய் ஆகிய 2 பேர் அலையில் சிக்கி கொண்டனர். சசிராயை நண்பர்கள் காப்பாற்றினார்கள்.

ஆனால் கவுரவகுமார் சர்மா கடலுக்குள் மூழ்கி விட்டார். இன்று காலை அவரது உடல் மெரினாவில் கரை ஒதுக்கியது. உடலை போலீசார் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News