செய்திகள்
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: பவானிசாகர் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்துக்கு நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் ஓரளவு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.12 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2475 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக நீலகிரி மலையில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தினர் அணையில் தண்ணீர் போதுமானதாக இருப்பதால் உயிர்நீர் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் இப்போதுள்ள அணையின் நீர் இருப்பை பொறுத்தவரை இன்னும் கூடுதலாக 10 அடியாவது தண்ணீர் இருக்க வேண்டும் என பொதுப்பணி துறையினர் கருதுகிறார்கள்.
நீலகிரி மலையில் தொடர்ந்து பருவமழை பெய்து தினமும் கணிசமான முறையில் நீர்வரத்து வந்து கொண்டிருந்தால் மட்டுமே விவசாயத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் சாத்தியம் உள்ளது.