செய்திகள்
நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் பவானிசாகர் அணைக்கு தற்போது நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதையொட்டி அணைக்கு தண்ணீர் வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2576 வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் தெங்கு மரகடாவில் இருந்து பவானிசாகர் வனப் பகுதியில் ஓடும் காட்டாறான மாயாற்றில் மழை வெள்ளம் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 55.44 அடியாக உள்ளது.
இன்று மாலை 57 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்யும் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வரும் விரைவில் பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.