செய்திகள்

விருத்தகிரீஸ்வரர் கோவில் சிலைகள் திருட்டு: விருத்தாசலம் கோர்ட்டில் சுபாஷ் கபூர் ஆஜர்

Published On 2017-08-12 05:02 GMT   |   Update On 2017-08-12 05:02 GMT
விருத்தகிரீஸ்வரர் கோவில் சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கில் விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுபாஷ் கபூர் ஆஜரானார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள அர்த்தநாரீஸ்வரர், பிரத்யங்கரா தேவி, கணபதி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ஆகிய கற்சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், லட்சுமி நரசிம்மன், ஊமைத்துரை, அண்ணாதுரை, வல்லபபிரகாஷ், ஆதித்யபிரகாஷ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் திருச்சியிலும், சிலர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்ததும் சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News