செய்திகள்

நெய்வேலியில் பட்டதாரி வாலிபர் மாயம்

Published On 2017-08-11 19:15 IST   |   Update On 2017-08-11 19:15:00 IST
நெய்வேலியில் வேலை தேடி திருச்சிக்கு சென்ற பட்டதாரி வாலிபர் மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகன் மனோஜ் பாபு (வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை தேடி திருச்சிக்கு சென்றார். அதன் பின்னர் மனோஜ்பாபு வீடு திரும்ப வில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை.

இதனை தொடர்ந்து அவரது தாய் அனுஜா தேவி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மனோஜ் பாபுவை தேடி வருகிறார்கள்.

Similar News