செய்திகள்

கடலூரில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-08-11 15:53 IST   |   Update On 2017-08-11 15:53:00 IST
கடலூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:

கடலூர் ஆல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற யாசிம் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் அவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர்அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விஜிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் குணமாகாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News