செய்திகள்
கடலூரில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கடலூரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் சேடப்பாளையத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 85). இவர் திடீரென்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை கலியபெருமாள் இறந்தார்.
இது குறித்து முதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கலியபெருமாள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.