செய்திகள்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Published On 2017-08-02 16:15 IST   |   Update On 2017-08-02 17:10:00 IST
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிர்வாகம் உறுதி அளித்ததையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடலூர்:

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது.

இதனை கண்டித்தும், மீண்டும் 26 நாட்கள் பணி வழங்க கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 12-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்ததுபோன்று, மாதத்திற்கு 26 நாட்கள் வேலை தருவதாக என்.எல்.சி. நிர்வாகம் உறுதி அளித்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள், 23 நாட்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

Similar News