செய்திகள்

பெரம்பலூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது

Published On 2017-07-26 18:56 IST   |   Update On 2017-07-26 18:56:00 IST
பெரம்பலூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.7.2017 அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளதாவது:-

கியாஸ் சிலிண்டர் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முக வர்களின் மெத்தனபோக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.7.2017 அன்று முற்பகல் 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின், மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம். மாவட்ட கலெக்டர் சாந்தா
தெரிவித்துள்ளார்.

Similar News